அமைதியான பொங்கல்; எஸ்.பி., அட்வைஸ்
கடலுார்; கடலுார் மாவட்ட எஸ்.பி.,ஜெயக்குமார், பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள செய்திகுறிப்பு:கடலுார் மாவட்ட பொதுமக்கள் குடும்பத்தாருடன், உறவினர்களுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட வாழ்த்துகள். இளைஞர்கள் முன்பகை, மதுபோதை காரணமாக பொதுஇடங்களில் தகராறில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதால், அரசு, தனியார் மற்றும் வெளிநாடு வேலைகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கும் வரும் இளைஞர்களும், பிரச்னைகளில் ஈடுபடக்கூடாது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை உறவினர்களோடும், குடும்பத்தாரோடும் கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.