மேலும் செய்திகள்
பொது இடங்களில் 'புகை' 69 பேருக்கு அபராதம்
20-Oct-2024
கால்நடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
03-Nov-2024
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் அனுமதியில்லாமல் செப்டிக் டேங்க் கழிவுநீர் அகற்றிய லாரி உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.]நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகளை பல தனியார் லாரிகள் மூலம் அகற்றுகின்றனர். இதற்கு நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமலேயே கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.நேற்று மாலை கழிவுநீரை எடுத்து சென்ற லாரியை நகராட்சி பொறியாளர் வெங்கடாஜலம், சுகாதார மேற்பார்வையாளர் சிவக்கொழுந்து ஆகியோர் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். இனி இதுபோன்று செய்தால் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைப்போம் என, எச்சரித்து அனுப்பினர்.
20-Oct-2024
03-Nov-2024