உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குறைந்த மின் அழுத்தம் பிரச்னையால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் அடுத்த முருகன்குடி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த பிரச்னை இருந்து வருகிறது.இது சம்பந்தமாக கிராம மக்கள் மின்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சத்தியவாடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மற்றும் மின்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர்.இதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ