உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்: மாஜி அமைச்சர் சம்பத் பேச்சு

அ.தி.மு.க., ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்: மாஜி அமைச்சர் சம்பத் பேச்சு

கடலுார்: கடலுார் வடக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்பது குறித்த ஆலோசனை கூட்டம் பாதிரிக்குப்பத்தில் நடந்தது. அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் தாமோதரன், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சத்யா பன்னீர்செல்வம், மருத்துவர் அணி தலைவர் சீனுவாசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கி பேசுகையில், '2026 சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க., கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை பெற்று தரும் வகையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் எழுச்சி பயணத்தை பொதுச் செயலாளர் பழனிசாமி மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது. ஆனால் இப்போது தினந்தோறும் கொலை, கொள்ளை என நடந்து கொண்டிருக்கின்றது. கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் தி.மு.க., காவு கொடுத்து விட்டது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழமுடியும். கூட்டணி கட்சிகளின் பலத்தால் ஆட்சிக்கு வந்த தி.மு.க., இதுவரை மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. கடலுார் மாவட்டத்திற்கு வருகை தரும் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சிறப்புமிக்க வரவேற்பை அளிக்க வேண்டும்' என்றார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், செல்வ அழகானந்தம், ஜெயச்சந்திரன், பேரவை செயலாளர் கனகராஜ், மாதவன், கந்தன், வினோத் ராஜ், மகளிர் அணி செயலாளர் சாந்தி, மீனவர் பிரிவு செயலாளர் குப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !