பொங்கல் பண்டிகையையொட்டி மீன் வாங்க குவிந்த மக்கள்
பரங்கிப்பேட்டை : மாட்டு பொங்கலை முன்னிட்டு நேற்று பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், மீன்கள் வாங்க, ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்தனர்.பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன் இறங்குதளம் உள்ளது. இங்கு, கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகில் கடலுக்கு சென்று, மீன்கள் பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, குல தெய்வத்திற்கு படைப்பதற்காக மீன்கள் வாங்க பரங்கிப்பேட்டை, புவனகிரி, கிள்ளை, புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அதிகாலை முதலே, அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்திற்கு வந்து குவிந்தனர்.ஒரு கிலோ வஞ்சரம் மீன் 900 ரூபாய், கொடுவா 800, வவ்வால் 750, அயிலா 750, சங்கரா 400, இறால் 350 ரூபாய் என விற்பனை செய்தனர். நேற்று மீன் விலை, வழக்கத்தைவிட கூடுதலாக இருந்தது.