மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் மா.கம்யூ., திட்டக்குடி வட்டக்குழு சார்பில், மக்கள் சந்திப்பு துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.மூத்த நிர்வாகி மகாலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் வரதன், மாதர் சங்க நிர்வாகிகள் சிவசங்கரி, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.