உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதி

ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதி

விருத்தாசலம்: செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளநீர் நிரம்பி உள்ளதால், வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை வழியாக கவணை, சித்தேரிக்குப்பம், செம்பளக்குறிச்சி, மாத்துார் உள்ளிட்ட20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை தண்ணீரில் நிரம்பி வழிகிறது. இதனால், அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்பகுதி கிராம மக்கள் விருத்தாசலம் - ஆலடி சாலை வழியாக சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ