உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பனிப்பொழிவு அதிகரிப்பு காய்ச்சலால் மக்கள் அவதி

பனிப்பொழிவு அதிகரிப்பு காய்ச்சலால் மக்கள் அவதி

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், புவனகிரி உள்ளிட்ட வட்டாரங்களில் கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், மக்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்வற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பனிப்பொழிவு காலை 9:00 மணி வரை நீட்டிப்பதால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. கடந்த காலங்களில் பருவ நிலை மாற்றத்தின் போது, வட்டாரம் அல்லது ஊராட்சி அளவில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் கிராம மக்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை நோக்கி படையெடுப்புதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறப்பு முகாம் நடத்தி மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி