உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவறை புதுப்பிக்க கோரி மக்கள் மனு

கழிவறை புதுப்பிக்க கோரி மக்கள் மனு

கடலுார்: கடலுார் துறைமுகம் மக்கள் கழிவறைகளை புதுப்பித்து தரக்கோரி மனு அளித்தனர்.இதுகுறித்து கடலுார் துறைமுகம் குட்டைக்கார தெரு, கவிகாளமேகம் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில், அளித்த மனு: கடலுார், துறைமுகம் குட்டைக்கார தெரு, கவிகாளமேகம் தெரு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மூன்று கழிவறைகள் உள்ளன. குடியிருப்பு பகுதியில் இருந்த ஒரு கழிவறை இடிக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தில் ரேஷன் கடை அல்லது சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும். குட்டைக்காரத்தெருவில் உள்ள பழைய கழிவறை, கவி காளமேகம் தெருவில் உள்ள கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்காக புதுப்பித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை