மேலும் செய்திகள்
ஒன்றிய அலுவலகம் முற்றுகை
30-Dec-2025
விருத்தாசலம்: கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, கிராம மக்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் அடுத்த எடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டோர், பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று மதியம் 12:00 மணியளவில், தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், தாசில்தார் அரவிந்தனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசிக்கிறோம். இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பொது மக்களுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் கோவில், பொது குளத்திற்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு, பொது மக்கள் பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் அரவிந்தன், நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக, விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற கிராம மக்கள், பி.டி.ஓ., அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.
30-Dec-2025