மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
25-Dec-2024
கடலுார்: அண்ணா தொழிற்சங்க, போக்குவரத்து கடலுார் மண்டல நிர்வாகிகள் தேர்தலுக்கு, விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் அண்ணா தொழிற்சங்கங்களின் மண்டல நிர்வாகிகள் பொறுப்புகள் புதியதாக தேர்வு செய்யப்படுகிறது. அதற்காக விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நெய்வேலியில் நடந்தது. அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி, கடலுார் மண்டலத்திற்கு உட்பட்ட கடலுார் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றார்.கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத், தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், கிழக்கு மாவட்டம் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணை செயலாளர்கள் பாண்டுரங்கன், பி.ஹெச்.இ.எல்., தமிழரசன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்ரமணியன், ஜெ., பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், வடக்குத்து கோவிந்தராஜ், வடலுார் நகர கழக செயலாளர் பாபு, குறிஞ்சிப்பாடி ஆனந்தபாஸ்கரன், கடலுார் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
25-Dec-2024