உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இலவச மனைப்பட்டா புதுப்பிக்க கோரி மனு

இலவச மனைப்பட்டா புதுப்பிக்க கோரி மனு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே இலவச மனைப்பட்டாவை புதுப்பித்து தரக்கோரி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சியில் கடந்த 1999ம் ஆண்டு எருமனுார், வடக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது.இந்நிலையில், இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டவர்களின் மனைகள் இதுவரை புதுப்பிக்காமல் உள்ளது. இதனால், தங்களின் மனைப்பட்டாவை கண்டுபிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அளித்த மனுவில், 'எருமனுார் ஊராட்சி சர்வே எண் 394, 402ல் உள்ள மனைப்பட்டாவை புதுப்பித்து தர' வேண்டுமென, கூறியிருந்தனர். குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ