உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்

நெய்வேலியில் பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாட்டம்

நெய்வேலி: நெய்வேலியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி அடுத்த பெரிய காப்பான்குளம் கிராமம் கரந்தை அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. என்.எல்.சி., பி.எம்.எஸ் தொழிற்சங்க தலைவர் வீர வன்னிய ராஜா சார்பில் ஆயிரத்திற்கம் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,பா.ஜ., முன்னாள் மாநில ஓ.பி.சி., அணி தலைவர் சாய் சுரேஷ், முன்னாள் மாவ ட்ட பொதுச் செயலாளர் ராம் குமார், காப்பான்குளம் முன்னாள் கவுன்சிலர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், நெய்வேலி நகர தலைவர் மணிகண்டன், துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் வீர வன்னிய வேங்கன், பொருளாளர் தாமரை, இளைஞரணி துணைத் தலைவர் சந்தோஷ், மாற்று கட்சி நிர்வாகிகள் வேல்முருகன், சங்கர், பரசுராமன், பழனிவேல், கிஷோர், விமல் ராஜ், படையப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ