உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

பா.ம.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

கடலுார் : கடலுாரில் பா.ம.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். கடலுார் மாநகர செயலாளர் ரமேஷ், தலைவர் பிரகாஷ், பிரபு, ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த ராஜா, கோபால், தயாளன், சங்கர், பிரபாகரன், ராஜவேல், முத்துக்குமரன், பிரேம்குமார், நட்ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரும் 6ம் தேதி பா.ம.க, தலைவர் அன்புமணியின், 'தமிழகத்தை காக்க உரிமை மீட்பு' நடைபயணம் கடலுாரில் நடக்கிறது. 7ம் தேதி கடலுாரில் உள்ள மீனவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மேலும், துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடலுாரில் மருத்துவக்கல்லுாரி அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் தாமரைக்கண்ணன், மாநில அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் போஸ் ராமச்சந்திரன். மாநில சமூக நீதி பொருளாளர் தமிழரசன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட இளைஞர் சங்கர் செயலாளர் விஜய் வர்மன், மாவட்ட பசுமைத்தாயகம் தலைவர் சரவணன், தொகுதி செயலாளர் துரை சரவணன், மாவட்ட பொருளாளர் லதா, விஜய பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை