உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ம.க., தலைவர் இன்று வருகை மாவட்ட செயலாளர் அழைப்பு

பா.ம.க., தலைவர் இன்று வருகை மாவட்ட செயலாளர் அழைப்பு

கடலுார் :கடலுார் மாவட்டத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி இன்று சுற்றுப்பயணம் செய்கிறார் என, மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரது அறிக்கை: கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ், 'மக்களின் உரிமை மீட்க நடைபயணம்' துவக்குகிறார். பின், உழவர்சந்தை அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். கடலுார் மாவட்டத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சியில் பா.ம.க., பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோ விந்தசாமி, தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், கிழக்கு மண்டல செயலாளர் வைத்தி, தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் உட்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை