முகநுாலில் அவதுாறு பதிவு பா.ம.க.,வினர் போலீசில் புகார்
விருத்தாசலம் : பா.ம.க., மாவட்ட செயலாளரை முகநுாலில் அவதுாறாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துருவிடம் நேற்று அளித்த புகார் மனு:மாவீரன் ஸ்ரீ கும்பகோணம் என்ற முகநுால் ஐ.டி.,யில் அடையாளம் தெரியாத நபர், என்னைப்பற்றி தவறான செய்திகளை பரப்பி, கொலை மிரட்டல் விடுத்து பல பதிவுகள் வந்தன.நேற்று 15ம் தேதி கனிம வளத்தை கொள்ளையடிக்கும் பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் என்றும், மேலும் தரக்குறைவான முறையில் பதிவுகள் வந்தன. இதனால் எனது உயிருக்கும், நற்பெயருக்கும், மாவட்ட செயலாளர் பதவிக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையேற்று, பா.ம.க.,வினர் கலைந்து சென்றனர்.