மேலும் செய்திகள்
தொழிற்சாலையில் மின் ஒயர் திருடியவர் கைது
19-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, வெவ்வேறு இடங்களில் இரு சிறுமிகளை திருமணம் செய்த இரு வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் அருண்குமார், 25. இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார். இதில் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் அருண்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் புரு ேஷாத்தமன், 30; இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துள்ளார். பின்னர், இதில், சிறுமி தற்போது, இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.தகவல் அறிந்த விருத்தாசலம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் பாரதி புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் புரு ேஷாத்தமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
19-Apr-2025