உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், போக்சோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைவர் ராஜா ஜூவல்லரி உரிமையாளர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் அசோக்குமார், பொருளாளர் குருசாமி, முன்னாள் தலைவர் அழகிய மணவாளன், முன்னாள் செயலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஆரோக்கியமேரி வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் கவிதா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லதா, காவலர் சுந்தரி, வழக்கறிஞர் விஸ்வேஷ்வரன், வர்த்தகர் சங்க நகர செயலர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிர்வாகிகள் ஆசைத்தம்பி, லதா பார்த்தசாரதி, ஜஸ்டின், டேவிட், கிருஷ்ணன், ஹரிராமன், முகமது அன்சாரி மற்றும் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை