மேலும் செய்திகள்
வேன் மோதிய விபத்தில் பைக்கில் சென்றவர் பலி
24-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் இருவேறு சிறுமிகள் கர்ப்பமானது குறித்து வாலிபர்கள் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் குமார் மகன் விஜய். இவர், 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். உடல் நிலை பாதித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது. இதேபோல், குப்பநத்தம் பரமசிவம் மகன் பிரேம்குமார், 20, என்பவர் 17 வயது சிறுமியுடன் ஓராண்டாக பழகினார். சிகிச்சைக் காக மருத்துவனை சென்ற போது, சிறுமி 4 மாதம் கர்ப் ப மாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் புவனேஸ் வரி அளித்த புகாரின பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையிலான போலீசார் நேற்று விஜய், பிரேம்குமார் ஆகியோர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
24-Jul-2025