உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஷ வண்டுகள் அழிப்பு 

விஷ வண்டுகள் அழிப்பு 

மங்கலம்பேட்டை : விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள், 60. இவரது வீட்டின் பின்புறம் உள்ள மா மரத்தில் விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தது. இந்த விஷ வண்டுகள் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.இதுகுறித்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று விஷ வண்டுகளை அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை