உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கும்தாமேடு தரப்பாலத்தில் தண்ணீ;ர் போக்குவரத்திற்கு போலீஸ் தடை

கும்தாமேடு தரப்பாலத்தில் தண்ணீ;ர் போக்குவரத்திற்கு போலீஸ் தடை

கடலுார் ; கடலுார் சுற்றுப்பகுதியில் பெய்த கன மழையால் கும்தாமேடு தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தில் தண்ணீர் வழிந்தோடுகிறது.வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கடலுார் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த கன மழையால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்நிலைகள் நிரம்பி, தென்பெண்ணை ஆற்றில் மழைநீர் கலந்து வருகிறது.இதனால், கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கும்தாமேடு தரைப்பாலத்தில் தற்போது தண்ணீர் வழிந்தோடுகிறது. இந்த பாலத்தின் வழியாக கும்தாமேடு மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கடலுாருக்கு வந்து செல்வர்கள். தற்போது தண்ணீர் செல்வதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், சிலர் பாலத்தில் தண்ணீர் செல்வதையும் பொருட்படுத்தாமல், ஆபத்தான முறையில் வாகனங்களில் கடந்து சென்றனர்.இதனால், ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் கும்தாமேடு தரைப்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதித்து போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிர கண்காணித்து வருகின்றனர்.இதேபோன்று, கடலுார் கெடிலம் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கம்மியம்பேட்டை தடுப்பணை நிரம்பி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை