உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

விருதை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

விருத்தாசலம் : காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக விருத்தாசலம் ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.அதன்படி, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருப்பு பாதை இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படை சப் இன்ஸ்பெக்டர் ராயுடு, வெடிகுண்டு நிபுணர்கள் நியூட்டன் ஆரோக்யராஜ், மணிகண்டன் ஆகியோர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக பயணிகளின் உடமைகள், பார்சல் பெட்டிகள், மூட்டைகளை சோதனை செய்தனர்.நடைமேடைகளில் குப்பை தொட்டிகளும் சோதனை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை