உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விதிமீறல் வாகனங்கள் போலீசார் அபராதம்

விதிமீறல் வாகனங்கள் போலீசார் அபராதம்

கடலுார் : கடலுாரில் விதிகளை மீறி அதிக சப்தத்தை எழுப் பிய ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலுாரில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக சப்தத்தை எழுப்புவதற்காக பைக்குகளில் ஏர் ஹாரன்கள், சைலன்சர்கள் பொருத்தப்படுவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில், கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சிவக்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்குகளில் பொருத்தியிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள், சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ