மேலும் செய்திகள்
நடுவீரப்பட்டு -- பாலுார் சாலை அதிகாரிகள் ஆய்வு
05-Mar-2025
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே எரிந்த நிலையில் இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த பாலூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 52; இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் அப்பகுதியில் உள்ள கோவில்களில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.கடந்த 19ம் தேதி மதியம் பாலுார் சிவன் கோவிலில் அன்னதானம் சாப்பிட சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை சன்னியாசிப்பேட்டை பழைய காலனி ராஜசேகர் கரும்பு தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில், முகம் சிதைக்கப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த நடுவீரப்பட்டு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, முருகனை யாராவது கொலை செய்து எரித்துவிட்டு சென்றனரா என, விசாரித்து வருகின்றனர்.
05-Mar-2025