பெண் தற்கொலை போலீஸ் விசாரணை
பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம் அடுத்த பெரிய கொசப்பள்ளம், அணைக்கட்டு சாலையை சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி கஸ்துாரி, 59. இவர், நேற்று காலை 6:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.