உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கனகசபையில் பக்தர்கள் தரிசனம் போலீஸ் குவிப்பால் பரபரப்பு

கனகசபையில் பக்தர்கள் தரிசனம் போலீஸ் குவிப்பால் பரபரப்பு

சிதம்பரம்:கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த, 4ம் தேதி துவங்கியது. இன்று தேரோட்டம் நடக்கிறது. நேற்று முதல், 14ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, கனகசபையில் பக்தர்களை அனுமதிப்பதால் இடையூறு ஏற்படும் என, தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி, தெய்வீக பக்தர்கள் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மற்றும் காவல் துறைக்கு கடிதம் கொடுத்திருந்தார். அதே சமயத்தில், கோவில் தீட்சிதர்கள் தரப்பில், பூஜை முறைகள், பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு காரணத்தால், 11 முதல் 14ம் தேதி வரை கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி அளிப்பதில் பல்வேறு சிரமம் ஏற்படும் எனவும், விழாவிற்கு பாதுகாப்பு கேட்டும் காவல் துறைக்கு கடிதம் கொடுத்தனர்.இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கனகசபையில் ஏறி சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என, நேற்று காலை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, தெய்வீக பக்தர்கள் பேரவையினர் அறிவித்தனர்.இதையடுத்து, நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலுக்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். போராட்டம் அறிவித்த பக்தர்கள் பேரவையினரும் கனகசபை மீதேறி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி