மேலும் செய்திகள்
தேவனாம்பட்டினத்தில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு
27-Dec-2024
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சிதம்பரத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி அல்லி,50; இவர், நேற்று மாலை, கடலுார், தேவனாம்பட்டிணம் கடற்கரையில் வெகுநேரம் நின்று கொண்டிருந்தார்.கடற்கரையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சந்தேகமடைந்து, அல்லியை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அல்லியின் கணவர் ஜெயபால் சில ஆண்டிற்கு முன் இறந்துவிட்டதால், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக, கடற்கரைக்கு வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார், அல்லிக்கு அறிவுரை கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
27-Dec-2024