உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: பா.ம.க.,வினர் மீது வழக்கு

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: பா.ம.க.,வினர் மீது வழக்கு

கடலுார்: கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பா.ம.க.,வினர் 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடலுார் கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் தனசேகரன்,45; வன்னியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவரான இவர், பிற சமூகத்தை பற்றி அவதுாறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதுகுறித்து வி.சி., கட்சி நிர்வாகி அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தனசேகரனை நேற்று முன்தினம் கைது செய்து, புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தனர்.அவரை விடுவிக்க வேண்டி அவரது மனைவி உள்ளிட்ட 20 பெண்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்த புகார்களின் பேரில் 20 பெண்கள் உட்பட 70 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !