உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பொதுமக்களிடம் அடாவடி வசூலில் ஈடுபடக்கூடாது; திருநங்கைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

பொதுமக்களிடம் அடாவடி வசூலில் ஈடுபடக்கூடாது; திருநங்கைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

சிதம்பரம் : சிதம்பரம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் குழுவாக வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் வியாபார தளங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் . பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஆசிர்வாதம் வழங்கி பணம் வசூலிப்பது வழக்கம். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி, சிதம்பரம் நகர பகுதிகளுக்கு பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். இதற்கிடையில் சிதம்பரம் மேலவீதி கஞ்சித் தொட்டி அருகே மற்றும் மேல வீதியில் கடை வீதியிலும் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் கும்பலாக நின்று கொண்டு கடைகளுக்கு வரும் பொது மக்களிடம் கட்டாயப்படுத்தி அடாவடியாக பணம் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் அளித்தும், சிலர் சமூக வலைத்தளங்களிலும் திருநங்கைகள் அட்டகாசம் குறித்து வெளிக்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் பிரச்னைக்குறிய திருநங்கைகள் அனைவரையும் சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். திருநங்கைகள், ''பொதுமக்களிடம் பணம் வசூலிக்க கூடாது என கண்டிப்புடன் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தார். போலீசாரின் அறிவுரையை திருநங்கைகள் தீபாவளி பண்டிகை வரையிலாவது கடைபிடிப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை