மேலும் செய்திகள்
கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு
23-Oct-2024
கடலுார்; கடலுார் மாநகராட்சி பூங்காவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.கடலுார் மாநகராட்சி சார்பில் பாரதி சாலையில் சுப்ராயலு ரெட்டியார் பூங்கா மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த பூங்காவை தற்போது காதலர்கள் காலை முதல் மாலை வரை ஆக்கிரமித்து கொள்கின்றனர். அவர்களது நடவடிக்கைகள், சிறுவர்களை அழைத்து செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.அதையடுத்து, கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று பூங்காவில் இருந்த காதல் ஜோடிகளை எச்சரித்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
23-Oct-2024