மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
06-Oct-2024
திட்டக்குடி: உலக போலியோ தினத்தையொட்டி, திட்டக்குடி ஞானகுரு மெட்ரிக் பள்ளி சார்பில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளி தாளாளர் சிவகிருபா தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு தாசில்தார் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அய்யாதுரை வரவேற்றார். ரோட்டரி சங்கம் பிரபு, டாக்டர் செல்வராஜ், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.துணை தாசில்தார் ராமர், விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோஷமிட்டு முக்கிய வீதிகளின் வழியே சென்று பள்ளியை வந்தடைந்தனர்.
06-Oct-2024