ஓட்டுச்சாவடி பகுப்பாய்வு கட்சிகளிடம் கருத்து கேட்பு
சிதம்பரம்: சிதம்பரம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுச்சாவடி பகுப்பாய்வு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிகள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சப் கலெக்டர் கிஷன்குமார் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் புகழேந்தி, நகராட்சி ஆணையாளர் மல்லிகா, தாசில்தார் கீதா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செல்வலட்சுமி, தேர்தல் பிரிவு உதவியாளர் ரவி முன்னிலை வகித்தனர். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், தொழில்நுட்ப பிரிவு ஜாபர்அலி, கவுன்சிலர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர், முத்துப்பெருமாள், சங்கர், கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் ரவீந்திரன், அ.தி.மு.க., நிர்வாகிகள் கருப்பு ராஜா, வெங்கடேசன், அரவிந்த், தே.மு.தி.க., பாலு, பாலகிருஷ்ணன், காங்., தில்லை குமார், இந்திய கம்யூ., மாரியப்பன், பா.ஜ., ரகுபதி, வி.சி., ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஓட்டுச்சாவடிகள் பகுப்பாய்வு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.