உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு; மாவட்டத்தில் 8,357 பேர் எழுதினர்

முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு; மாவட்டத்தில் 8,357 பேர் எழுதினர்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நடந்த முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வை 8,357 பேர் எழுதினர். தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி தேர்வு நேற்று நடந்தது. இதனையொட்டி கடலுார் மாவட்டத்தில், 33 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10.00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு நடந்தது. தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்கள், தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத 9,108 பேர் விண்ணப்பித்தனர். இதில், 8,357 பேர் தேர்வு எழுதினர். 751 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வில் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமரா மூலம் தேர்வை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி