உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானையுடன் வந்து மனு

மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானையுடன் வந்து மனு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள், மண் பாணை மற்றும் அடுப்புடன் வந்து மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் மண் அடுப்பு மற்றும் மண்பானையுடன் வந்து அளித்த மனுவில்; மண்பாண்ட பொருட்கள் விற்பனை மக்களிடம் குறைந்து வருகிறது. இதனால், மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு மண் அடுப்பு, மண்பானைகளை ரேஷன் கடைகளில் மக்களுக்கு விற்னை செய்ய வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலமாக மானியக்கடன் வழங்க வேண்டும். வீடு இல்லாத மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும். மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்ய உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி