உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆராய்ச்சி மாணவிக்கு பாராட்டு 

ஆராய்ச்சி மாணவிக்கு பாராட்டு 

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவிக்கு ஆராய்ச்சி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையம், பி.எச்..டி., முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி மார்கிரேட். இவ ருக்கு, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள, மைசூரில் இயங்கி வரும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் சார்பில் (NTS) முனைவர் பட்ட ஆராய்ச்சி உதவித் தொகைவழங்கப்பட்டுள்ளது. மொழியியல் துறையில் ஆராய்ச்சி திறனைஅங்கீகரிக்கும் விதமாக இம்மாணவிக்கு, கடந்த மாதம் 23 ம் தேதி இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அதனையடுத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி, மாணவி யை பாராட்டினார். ஆராய்ச்சி வழிகாட்டியும், மொழியியல் உயராய்வு மைய இயக்குநருமான சந்திரமோகன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை