உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாணவிக்கு பாராட்டு 

 மாணவிக்கு பாராட்டு 

கடலுார்: தேசிய கபடி போட்டியில் கடலுார் மாணவி வெள்ளி பதக்கம் பெற்றார். அரியானா மாநிலம், சோனிபட்டில், 35வது தேசிய அளவிலான சப் ஜூனியர் கபடி போட்டி நடந்தது. இதில், கடலுார் உண்ணாமலை செட்டிசாவடியை சேர்ந்த மாணவி அனுப்பிரியா, தமிழக அணி சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றார். இதையொட்டி மாணவியை, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் வேலவன், ஆயுதப்படை தலைமை காவலர் முரளி ஆகியோர் பாராட்டினர். தேசிய விளையாட்டு வீரர் ஜீவா, தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ