விருத்தாசலம் பெண்கள் பள்ளியில் தினமலர் பட்டம் இதழ் வழங்கல்
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில், விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் சுரேஷ் வழங்கி, துவக்கி வைத்தார்.தலைமை ஆசிரியர் செல்வகுமாரி, கோவிந்தராஜ், ராஜேஷ்குமார், கல்பனா, காயத்ரி, தி.மு.க., நிர்வாகி சுரேஷ் உடனிருந்தனர்.