உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தனியார் மருத்துவமனை டாக்டர் கார் ஓட்டி விபத்து: இருவர் படுகாயம் 

தனியார் மருத்துவமனை டாக்டர் கார் ஓட்டி விபத்து: இருவர் படுகாயம் 

திட்டக்குடி : திட்டக்குடியில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் மருத்துவமனை டாக்டரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தைச் சேர்ந்தவர் சபரிராஜன், 40. தர்மகுடிக்காட்டில் மதுரா என்ற பெயரில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9:30 மணியளவில் வதிஷ்டபுரத்தில் இருந்து மருத்துவமனைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே வந்தபோது, பைக்கில் நின்று கொண்டிருந்த சிறுமுளை ஜெயபால், 47, என்பவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி, சென்றார். தொடர்ந்து, வதிஷ்டபுரம் சுப்ரமணியன், 68, என்பவர் சாலையோரம் நடந்து சென்றபோது அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் மருத்துவமனை சென்றார். இதையறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையிலான போலீசார் டாக்டர் சபரிராஜன் மற்றும் அவரது காரை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தனியார் மருத்துவமனை டாக்டர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி