உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

 பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

சிதம்பரம்: பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிதம்பரம் ஓட்டல் சாரதாராம் சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு 'திறமைக்கோர் திருவிழா' என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், 37 ம் ஆண்டு விழாவையொட்டி, நடத்தப்பட்ட நடனம், பாட்டு, பேச்சு உள்ளிட்ட 7 போட்டிகளில், சிதம்பரத்தை சேர்ந்த, 21 பள்ளிகளில் இருந்து நுாற்றுக்கும் மேற்ட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நடுவர்களாக தியாகராஜன், பாரதி, அகிலா ஆகியோர் இருந்தனர். இதன் பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் சாரதாராம் ஓட்டலில் நடந்தது சாரதாராம் நிர்வாக இயக்குநர் சுவேதகுமார் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், டாக்டர் அசோக்பாஸ்கர் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும், சிதம்பரம் காந்திமன்றம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு சேவை திட்டங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலாளர்கள் ராஜா, முத்துவேல், சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி