மேலும் செய்திகள்
சமூக நல்லிணக்க விழிப்புணர்வு முகாம்
09-Aug-2025
பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் (சத்பாவனா திவாஸ்) நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தன்னார் வ தொண்டர் சர்மிளா நல்லிணக்க நாள் அனுசரிப்பின் நோக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், 'ஆண், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், இணைய வழி குற்றங்களுக்கான பாதுகாப்பு உதவி எண் குறித்து பேசினார். தொடர்ந்து, நல்லிணக்க நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விடையளித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சூசை மரியநாதன், அசோக்குமார், ராஜ்குமார் பங்கேற்றனர். ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.
09-Aug-2025