மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சோதனை
கடலுார்: கடலுார் ஆல்பேட்டை சோதனை சாவடியில் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., சார்லஸ், இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்தனர்.