மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
24-May-2025
கடலுார், : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன் முன்னிலை வகித்தார். பொது செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் துவக்க உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளர் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான சம்பத் கண்டன உரையாற்றினார். துணை மேயர் தாமரைச்செல்வன், காங்., மாநில நிர்வாகி சந்திரசேகரன், வி.சி., மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி, வெண்புறா பொது நல பேரவை குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.கடலுார் புது பஸ் ஸ்டாண்டை எம்.புதுாரில் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இதற்கு பதிலாக பாதிரிகுப்பம், கோண்டூர், நத்தப்பட்டு உள்ளிட்ட ஏதாவது ஒரு இடத்தில் அமைக்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.பொருளாளர் வெங்கட்ரமணி நன்றி கூறினார்.
24-May-2025