உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்துறையில் ஒப்பந்த பணி கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்துறையில் ஒப்பந்த பணி கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம்:மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்கள் நியமிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், மின் வாரிய பென்சனர் ஐக்கிய சங்கம், ஐ.டி.ஐ.,படித்த வேலை வேண்டுவோர் ஐக்கிய சங்கத்தினர் இணைந்து நெல்லிக்குப்பம் மின்வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன், தலைவர் மாயவன், பொருளாளர் கல்யாணசுந்தரம், மாநில செயலாளர் ரவிச்சந்திரன் கவுரவ தலைவர் அரிசெல்வம், அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 23 ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை