உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் மயானத்திற்கு எதிர்ப்பு; விருத்தாசலம் அருகே தர்ணா

மின் மயானத்திற்கு எதிர்ப்பு; விருத்தாசலம் அருகே தர்ணா

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே மின் மாயனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில், எஸ்.சி.பி.ஏ.ஆர்., திட்டம் ரூ.2.10 கோடி மதிப்பில், விருத்தாசலம் ஒன்றியத்திற்கு மின் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுசம்பந்தமாக, தாசில்தார் உதயகுமார் தலைமையில், தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், மாலை 4:00 மணியளவில் அமைதி கூட்டத்தை புறக்கணித்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்த கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாசில்தார் உதயகுமார், சின்னவடவாடி பகுதியில் உள்ள அரசு நிலத்தில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை