உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோவில் ஆர்ச் அகற்ற எதிர்ப்பு: பண்ருட்டி அருகே முற்றுகை

 கோவில் ஆர்ச் அகற்ற எதிர்ப்பு: பண்ருட்டி அருகே முற்றுகை

பண்ருட்டி: பண்ருட்டி அருகே கோவில் 'ஆர்ச்' அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையிலான 65 கி.மீ. நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை இ.கே.கே.நிறுவனம் செய்து வருகிறது. இதில், கண்டரக்கோட்டை மெயின் ரோட்டில் அரசியம்மன் கோவில் ஆர்ச் நான்கு வழிச்சாலை பணிக்கு இடையூறாக உள்ளதால் இடித்து அகற்ற நேற்று நில எடுப்பு தாசில்தார் ஸ்ரீதர் தலைமையில் இ.கே.கே.நிறுவன ஊழியர்கள் பகல் 12:00 மணிக்கு வந்திருந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள், கோவில் ஆர்ச்சை இடிக்கக்கூடாது. கண்டிப்பாக இடிக்க வேண்டுமெனில் மாற்று இடத்தில் இதற்கான 'ஆர்ச்' கட்டித்தருவதாக உறுதியளித்த பிறகு அகற்ற வேண்டும் என கூறி முற்றுகையிட்டனர். இதனையடுத்து தாசில்தார் ஸ்ரீதர் தலைமையிலான நில எடுப்பு குழுவினர் நகாய் அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்த பின் கூறுவதாக கூறியதால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ