உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலையில் போராட்டம்

அண்ணாமலை பல்கலையில் போராட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில்காத்திருப்புபோராட்டம் நேற்று நடந்தது. நகரசெயலாளர் சபரிதலைமைதாங்கினார்.சிறப்பு அழைப்பாளராகமாவட்ட தலைவர் பூபதி,மாவட்டசெயலாளர் சவுமியா, விழுப்புரம் மாவட்டசெயலாளர் ஜீவானந்தம், மாவட்டநிர்வாகிகள் சிவநந்தினி, செங்கதிர், சிவன்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அன்பு, விமல், திருமாறன் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகதரையில் அமர்ந்து கையில் கோரிக்கைகள்அடங்கிய பதாகைகள் ஏந்திகாத்திருப்பு போராட்டத்தில்ஈடுபட்டனர். அதில், பல்கலைமாணவர்களை, கடந்தாண்டு கல்விகட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்திய பிறகே, தேர்விற்கு அனுமதி என்பதை வாபஸ் பெற வேண்டும்; துணைவேந்தரை நியமிக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை