உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரி முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கழகம் சார்பில்,கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சிதம்பரம் கிளை சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அரசு கல்லுாரி முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் அறிவழகன் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். 10க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் சங்கர் சாமிப்பிள்ளை, பொருளாளர் தங்க பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை