உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; தி.மு.க.,வினர் 700 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; தி.மு.க.,வினர் 700 பேர் மீது வழக்கு

கடலுார்; கடலுாரில் தமிழக கவர்னரை கண்டித்து தி.மு.க., சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தமிழக கவர்னரை கண்டித்தும், மாநில அரசை மதிக்காத கவர்னரை திரும்ப பெறக்கோரியும் தி.மு.க., சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுாரில் மாநகர செயலாளர் ராஜா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அனுமதியின்ற ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, 100 பெண்கள் உட்பட 700 பேர் மீது கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை