உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காரணப்பட்டு ஊராட்சியில் நிவாரண உதவி வழங்கல்

காரணப்பட்டு ஊராட்சியில் நிவாரண உதவி வழங்கல்

கடலுார் : கடலுார் அடுத்த காரணப்பட்டு ஊராட்சியில் மழை, வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு, நிவாரண உதவி வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தமிழரசி பிரகாஷ், துணைத்தலைவர் கலியமூர்த்தி, நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ரூ.3.5 லட்சம் மதிப்பில் அரிசி, புடவை, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினர்.கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், தொ.மு.ச., ஆறுமுகம், நிர்வாகிகள் பார்த்திபன், வினாயகம், சுதாகர், முருகவேல், நந்தன், ரமேஷ், நடராஜ், ரஜினி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ