உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு ஷூ வழங்கல்

மாணவர்களுக்கு ஷூ வழங்கல்

புதுச்சத்திரம்: மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில், விளையாட்டு காலணி வழங்கப்பட்டது. புதுச்சத்திரம் அடுத்த சாமியார் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் டூ படிப்பவர்கள் ஆதித்யன், மணிபாலன். இவர்கள் இருவரும் மாவட்ட அளவில் நடந்த தடகளப்போட்டியில் போட்டியில் வெற்றி பெற்று, வரும் 24ம் தேதி, தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் இரு மாணவர்களுக்கும், விளையாட்டு காலணியை பரிசாக வழங்கினர். மணிபாலன் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், ஆதித்தன் ட்ரிபிள் ஜம்ப் போட்டியிலும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை